ஞாயிறு, 9 மே, 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 005)




திருச்சிற்றம்பலம் 

[5.] திருத்தில்லை


திருமுறை : 4 ( 80- வது பதிகம் )
பண் : கொல்லி
 திருவிருத்தம்

01   பாளையுடைக் கமுகு ஓங்கிப் பல்மாடம் நெருங்கி எங்கும்
       வாளையுடைப் புனல் வந்து ஏறி வாழ் வயல் தில்லைதன்னுள் 
       ஆளயுடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் 
       பீளையுடைய கண்களால் ப்ன்னைப் பேய்த் தொண் காண்பது என்னே.
02   பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி புலிஅதளன்
       உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் 
       திருஉடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்    
       திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக்காண்பது என்னே.

03.   தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் 
        அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் 
        பொடிக் கொண்டு அணிந்து பொன்  ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்
         உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

04    வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
        அச்சம் ஒழிந்தேன் அணிதில்லை அம்பலத்து ஆடுகின்ற
        பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த 
        கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு   காண்பது என்னே.

05    செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச்சிற்றம்பலவன்
        மைஞ் ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
        நெய்ஞ் ஞின்ற எரியும் விளக்கு ஒத்த நீலமணிமிடற்றான்
         கெஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

06   ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டான் 
       தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் என்கோன்
       வானத்தவர் உய்ய வன்நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் 
       ஏனத்துஎயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                                 காண்பது என்னே.

07    தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செந்தீயில் மூழ்க
        எரித்த இறைவன் இமையவர்கோன் இணை அடிகள் 
        தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
        சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                காண்பது என்னே.

08    சுற்றும் அமரர் சுரபதி திருப்பாதம் அல்லால்
        பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள்
                                                                                   நஞ்சை உண்டான்
       செற்று அங்கு அநங்கனைத் தீவிழித்தான் தில்லை 
                                                                                              அம்பலவன்
        நெற்றியி கண் கண்ட கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                காண்பது என்னே.

09   சித்தத்து எழுந்த செழுங்  கமலத்து அன்ன சேவடிகள் 
        வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
       முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
        மத்தமலர் கண்ட கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                          காண்பது என்னே. 

10     தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
         வரைக்கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்கோன் 
                                                                                                                   சிரித்து
         அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன்
         நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது 
                                                                                                              என்னே.

திருச்சிற்றம்பலம்           

   

செவ்வாய், 4 மே, 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - தலமுறை - (004)


04 - திருத்தில்லை

திருமுறை : 4 / (23-வது பதிகம்)

பண் : கொல்லி
திருநேரிசை

01.  பத்தனாய்ப் பாடமாடேன் பரமனே பரமயோகீ
       எத்தினால் பக்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
      முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற 
      அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.

02.   கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளி பங்கா
         ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருஉரு உடைய சோதீ
         திருத்தமாம் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
         நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே.

03.   கேட்டிலேன்  கிளைபிரியேன் கேட்குமா கேட்டிஆகில்
        நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே         
        மாட்டில் நீர் வாளை பாயு மல்கு சிற்றம்பலத்தே
        கூட்டமாம் குவிமுலையாள் கூட நீ ஆடுமாறே.
04.   சிந்தையைத் திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
        எந்தைநீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே
        செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே 
        அந்தியும் பகலும்  ஆட அடிஇணை அலசும் கொல்லோ. 

05.   கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நிந்தன் பாதம்
         கொண்டிருந்து ஆடிப்பாடிக் கூடுவன் குறிப்பினாலே
         வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
         எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே.

06.    பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
         மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
         ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்
         கூத்தா உன் கூத்து காண்பாண் கூட நான் வந்தவாறே.

07.    பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமைசெய்ய 
          ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தி 
          வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
          பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே.

08.    மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள்மேலே
          கனைப்பரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே
          தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
         அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே.

09.     நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே 
           வஞ்சமே செய்தியாலோ வானவர்த் தலைவனே நீ
           மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே 
           அஞ் சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே.

10.      மண் உண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும் 
            விண் உண்ட திருஉருவம் விரும்பினார் காணமாட்டார்
            திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
           பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடுமாறே.

திருச்சிற்றம்பலம்       

ஞாயிறு, 2 மே, 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)


திருத்தில்லை

திருமுறை : 5 / (2-வது பதிகம்)
பண் : குறிஞ்சி
திருக்குறுந்தொகை

01 பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைதனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

02 தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

03 கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை
எள்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

04 மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ.

05 பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண்மதி சூடியைச்
சிந்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

06 நீதியை நிறைவை மறைநான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

07 மைகொள் கண்டன் எண்தோளன் முக்கண்ணினன்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ.

08 முழுதும் வான்உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்கனம் உய்வனோ.

09 கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனைத்
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.

10 ஓங்கு மால்வரை எந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்
பங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.



திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...